நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏறக்குறைய அனைத்து நெகிரி செம்பிலான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் இருக்கத் தயாராக இல்லை

சிரம்பான்:

ஏறக்குறைய அனைத்து நெகிரி செம்பிலான்அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் இருக்கத் தயாராக இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர், மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கத்துடனேயே நீடிப்பதற்கான கட்சித் தலைமையின் முடிவை வரவேற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடியுடன் நடந்த ஒரு சந்திப்பில்,

அந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களும் நெகிரி செம்பிலானில் எதிர்க்கட்சியில் இருக்கத் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

மேலும் அந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு, நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸின் கூற்றுக்கு முரணாக இருந்தது.

குறிப்பாக நெகிரி செம்பிலானில் ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடரத் தங்கள் விருப்பத்தை அந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்தினர்.

கட்டுப்பாடு, சமநிலைப்படுத்தும் முறையாகச் செயல்படுவதற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களை மாநில அரசின் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று கூட அவர்கள் விரும்புகிறார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset