நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி மரணம்

அம்பாங்:

குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் ஏற்பட்ட  விபத்தில் கணவன், மனைவி மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் அம்பாங்கில் உள்ள கிளினிக்கல்ஸ் மருத்துவமனைக்கு அருகில், ஜாலான் அம்பாங் சாலையில் நிகழ்ந்தது.

குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரால் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

அதிகாலை சுமார் 5.34 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 61 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது 56 வயதான மனைவியும் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒரு காரும் சம்பந்தப்பட்டிருந்தது.

முதற்கட்ட விசாரணையில் 24 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.

விபத்தின் விளைவாக.கணவன், மனைவி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி.செய்யப்பட்டது.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறைத் தலைவர் முகமது சம்சுரி முகமது ஈசா இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset