நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு 56 பேர் பாதிப்பு; இருவர் மரணம்: சுகாதார அமைச்சு

புத்ராஜெயா:

கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை நாடு முழுவதும் வெப்பம் தொடர்பான நோய்களால் மொத்தம் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெப்பத்தாக்கத்தால் இரண்டு பேர் உயிரிழந்ததும் அடங்கும்.

வாகனத்தில் விடப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை, பினாங்கில் நடைபெற்ற மரத்தோன் போட்டியில் பங்கேற்ற 42 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வானிலை எச்சரிக்கை நிலை 1க்குக் கீழே இருந்தபோது இந்த இரண்டு நிகழ்வுகளும் நிகழ்ந்தன.

இருப்பினும், மூடிய சூழலில் கடும் வெப்பத்திற்கு ஆளாவது, நீண்ட காலத்திற்கு கடினமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆகியவையே முக்கிய ஆபத்துக் காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.

இவை கடுமையான நீரிழப்பு, உடல் வெப்பநிலையைச் சீராக்கத் தவறுவதற்குக் காரணமாக அமைந்தன என்று சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின்படி மொத்த நிகழ்வுகளில், 47 நிகழ்வுகள் வெப்பச் சோர்வு, நான்கு நிகழ்வுகள் உடற்பயிற்சியால் ஏற்படும் வெப்பத் தாக்கம், வெப்பத் தசைப்பிடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset