செய்திகள் மலேசியா
நன்னெறி பாடத்தை ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும்: தேர்வு வாரியத்திற்கு கல்வியமைச்சர் ஃபட்லினா உத்தரவு
பூச்சோங்:
எஸ்பிஎம் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வுத் தாள்களை மதிப்பிடுவது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, நன்னெறி பாடத்தை ஆய்வு செய்து மேம்படுத்துமாறு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தனது அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தாவிற்கு எனது நன்றி.
மேலும் கல்வியை மேம்படுத்துவதில் அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர். வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில் நன்னெறி கல்வி குறித்த பிரச்சினை தொடர்பில் பெற்றோர்கள், சமூகத்தினரின் கவலைகளைக் கருத்தில் கொண்டு,
இந்தப் பாடத்தை ஆய்வு செய்து மேம்படுத்துமாறு மலேசியத் தேர்வு வாரியத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
பூச்சோங்கில் உள்ள காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக கடந்த மாதம் வெளியான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் பல மாணவர்கள் நன்னெறி பாடத்தில் ஏ எடுக்கவில்லை.
அறிவியல், கணிதம் உட்பட பல பாடங்களில் அவர் ஏ எடுத்த மாணவர்கள் நன்னெறி பாடத்தில் ஏ எடுக்கவில்லை.
இது மாணவர்கள் மெட்ரிகுலேசனுக்கு விண்ணப்பிக்கும் போது பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக புகார்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 9:24 pm
கடும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு 56 பேர் பாதிப்பு; இருவர் மரணம்: சுகாதார அமைச்சு
May 3, 2026, 9:23 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி மரணம்
May 3, 2026, 5:16 pm
நள்ளிரவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 76 வயது மூதாட்டி உயிரிழப்பு
May 3, 2026, 2:13 pm
புக்கிட் பிந்தாங் ‘ரெயின் ரேவ்’ விழாவில் பரபரப்பு: கத்தியுடன் வந்த பெண் கைது
May 3, 2026, 1:47 pm
