செய்திகள் மலேசியா
சொந்த தொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம்; அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
புக்கிட்ஜாலில்:
சொந்த தொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017இன் திருத்தம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியக் குடிமக்களுக்கு சொக்சோ பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்.
இதனை வழிவகுக்கும் வகையில், சொந்த தொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017-இல் முன்மொழியப்பட்ட திருத்தம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, நாங்கள் இதை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வருவோம். ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதார அம்சங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், இந்த ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு வைத்துள்ளோம்.
இன்று புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற, தேசிய அளவிலான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்திற்கான உலக தினம் கொண்டாட்ட விழாவைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
இன்று உலக வேலையிட பாதுகாப்பு, சுகாதார தினமாமும்.
இதன் அடிப்படையில் புக்கிட் ஜாலில் அரங்கில் உலக வேலையிட பாதுகாப்பு, சுகாதார தினம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாட்டப்பட்டது.
வேலையிட பாதுகாப்பு, சுகாதாரம் என்பது தொழிலாளர்களின் உடல், மன நலனைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான அம்சமாகும்.
அவ்வகையில் வேலையிட பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக இன்றைய விழா தொடக்கத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இதே போன்று அனைத்து விழாக்களிலும் இதுபோன்ற விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 5:16 pm
நள்ளிரவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 76 வயது மூதாட்டி உயிரிழப்பு
May 3, 2026, 2:13 pm
புக்கிட் பிந்தாங் ‘ரெயின் ரேவ்’ விழாவில் பரபரப்பு: கத்தியுடன் வந்த பெண் கைது
May 3, 2026, 1:47 pm
கல்வி அனைத்து மாணவர்களுக்கான உரிமை; பாகுபாடு பார்க்கப்படாது: ஃபட்லினா சிடேக்
May 3, 2026, 10:25 am
