நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி அனைத்து மாணவர்களுக்கான உரிமை; பாகுபாடு பார்க்கப்படாது: ஃபட்லினா சிடேக்

பூச்சோங்:

கல்வி அனைத்து மாணவர்களுக்கான உரிமை என்பதால் அதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படாது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை உறுதியாக கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யுத்தம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பாக மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாணவர்களும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் நோக்கம் பாராட்டுகிறது.

இதன் அடிப்படையில் தான் இன்றைய விழாவில் கலந்து கொண்டேன்.

கல்வி அனைத்து மாணவர்களுக்கான உரிமை என்பதால் அதில் அனைத்து மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

இதுவே மடானி அரசாங்கம், கல்வியமைச்சின் முதன்மை இலக்காக உள்ளது.

இதனால் தமிழ்ப்பள்ளிகள் அதில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துகிறது.

மடானி அரசாங்கத்தின் இம்முயற்சிகள் தொடரும். இது எனது உத்திரவாதம் என்று கல்வியமைச்சர் கூறினார்.

முன்னதாக உரையாற்றிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா,

எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் நிலவும் சர்ச்சைகள் குறித்து கூறினார்.

இவ்விவகாரம் குறித்து கல்வியமைச்சு உரிய ஆய்வுகளை நடத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset