நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங் சிறுமி மாயம்: லாங்காட் ஆற்றின் 24 கிலோமீட்டர் சுற்றளவில் தீவிர தேடுதல் பணி தீவிரம்

காஜாங்: 

பண்டார் மஹ்கோத்தா செராஸ் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை கால்வாயில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமியைத் தேடும் பணி, இன்று மூன்றாவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. 

இந்தத் தேடுதல் நடவடிக்கையானது, சம்பவ இடத்திலிருந்து சுங்கை லாங்காட் வரை சுமார் 29 கிலோமீட்டர் தொலைவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தப் பணியில், தீயணைப்புத் துறை, காவல்துறை, நீர்ப்பாசன, வடிகால் துறை என மொத்தம் 60 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

மூன்று படகுகள், இரண்டு படகுகள், மோப்ப நாய் படை உதவியுடன் ஆற்றுப் படுகைகளின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது நீரோட்டம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாலும், வானிலை சீராக இருப்பதாலும் மீட்புப் பணிகளை விரைவாக முன்னெடுக்க முடிகிறது என்று மீட்புப் படைத் தளபதி இசுமான் அட்னான் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர் ஆற்றின் குறிப்பிட்ட பகுதிகளைப் பிரித்து, ஒவ்வொன்றாகச் சுத்தப்படுத்திச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பகுதியில் தேடுதல் பணி நிறைவடைந்ததும் அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இப்பகுதிகளில் உள்ள நீரோடைகள், ஆறுகளில் எவ்விதத் தடைகளும் இன்றிச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது பந்தை எடுக்க முயன்றபோது கால்வாயில் தவறி விழுந்த அந்தச் சிறுமி, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்தச் சிறுமியை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset