செய்திகள் இந்தியா
குஜராத் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ‘மோடி தத்துவங்கள்’, ஆர் எஸ் எஸ் பற்றி புதிய பாடம்; சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாத, தியாகங்கள் புரியாதவர்கள் பற்றி போதிப்பதா?: காங்கிரஸ் கடும் கண்டனம்
வதோதரா:
வதோதரா எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பாடத்திட்டத்தில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகம் தனது சமூகவியல் பாடத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்து, ‘தேசபக்தி சமூகவியல்’ என்ற தலைப்பில் புதிய பாடங்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த பாடத்திட்டத்தில், பிரதமர் மோடியின் தலைமைத்துவ பண்புகளை விளக்கும் ‘மோடி தத்துவங்கள்’, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூகப் பணிகள், உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சமூகவியல் துறைத் தலைவர் வீரேந்திர சிங் இது குறித்துக் கூறுகையில், ‘ஒரு தலைவரின் ஆளுமையை அவர் இருக்கும் போதே படிப்பது சிறந்தது. பிரதமர் மோடியின் மக்கள் தொடர்பு, கொள்கை முடிவுகளை மாணவர்கள் ஒரு ஆய்வுப் பொருளாகப் படிப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.
இது பி.ஏ. சமூகவியல் 4ம் ஆண்டு, எம்.ஏ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட உள்ளது. ஆனால் கல்வித்துறையில் அரசியல் புகுத்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாத, தியாகங்கள் புரியாத அமைப்புகளைப் பாடப்புத்தகங்களில் புகழ முற்படுவது துரதிர்ஷ்டவசமானது. நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் போன்ற முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மோடி தத்துவங்கள் போன்ற பாடங்கள் கொண்டு வரப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தைப் பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் திணிப்பது கல்வித்துறையின் நடுநிலைத்தன்மையைச் சீர்குலைக்கும்’ என்று தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிதி ஆயோக் திட்டங்களின் போது மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையிலேயே இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
