செய்திகள் உலகம்
34 ஆண்டுகளாக இயங்கி வந்த மலிவுக் கட்டண விமானமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவன செயல்பாடுகள் நிறுத்தம்
வெஸ்ட் பாம் பீச்:
அமெரிக்காவில் மிக குறைந்த கட்டணச் சலுகைகள் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது மஞ்சள் நிற விமானங்களை கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இயக்கியது.
சுமார் 17ஆயிரம் பேருக்கு நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஈரான் போரின் காரணமாக விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
இந்த நிறுவனத்தை அரசு ஏற்று நடத்தும் திட்டம் குறித்த ஒரு இறுதி முன்மொழிவை அரசு நிறுவனத்திடம் அளித்திருந்ததாகவும் ஆனால் அது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கடந்தவாரம் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 34 ஆண்டுகளாக இந்த துறையில் எங்களது மிக குறைந்த கட்டண சேவை மாதிரி ஏற்படுத்திய தாக்கத்தை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதற்கு எதிர்பார்க்கலாம். ஆனால் வேறு விமான நிறுவனங்களில் பயண முன்பதிவு செய்வதற்கு நிறுவனத்தால் எந்த உதவியும் செய்ய இயலாது.
எங்களது செயல்பாடுகளை முறையாக முடித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தொடங்கியிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
