செய்திகள் உலகம்
உள்நாட்டு சந்தையில் அரிசி தேக்கம்: விலைவாசியை நிலைப்படுத்த ஜப்பான் அரசின் அதிரடி முடிவு
டோக்கியோ:
ஜப்பானில் அரிசி விநியோகம் அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சந்தையில் அதன் விலையை நிலைப்படுத்த தனியார் வர்த்தகர்களிடமிருந்து சுமார் 1,50,000 டன் அரிசியை மீண்டும் வாங்குவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அதிரடித் திட்டத்தை ஜப்பானின் வேளாண்மை, வனம், மீன்வளத்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் அரிசி இருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், அதன் விலை கடுமையாகச் சரியக்கூடும் என்று ஜப்பான் நெல் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாக்கும் நோக்கில், முன்பு சந்தைக்கு வழங்கப்பட்ட அரிசியை அரசாங்கம் மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.
இந்த அதீத இருப்புக்கு ஜப்பானில் விளைச்சல் அதிகரித்ததும், அந்நாட்டு மக்கள் அரிசிக்கு மாறாகக் கோதுமைப் பொருட்களை அதிகம் உட்கொள்ளத் தொடங்கியதும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அரசாங்கத்தால் மீண்டும் வாங்கப்படும் இந்த அரிசி, நாட்டின் அவசரகால உணவு இருப்பாகப் பாதுகாக்கப்படும் அல்லது மனிதாபிமான அடிப்படையிலான உணவு உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால், சர்வதேச அளவில் அதன் அரிசி சந்தை குறைவாகவே உள்ளது. எனவே, உள்நாட்டு உணவுச் சங்கிலியைப் பாதுகாக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நேரடித் தலையீடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொருளாதாரச் சரிவைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்ட மிகச் சரியானதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பொருளாதார வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
