நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை RM4 ரிங்கிட்டா?: மக்கள் வீட்டிலேயே வளர்க்க பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆலோசனை

பினாங்கு:

சந்தைகளில் கறிவேப்பிலையின் விலை ஒரு கிலோகிராம் RM14 முதல் RM18 ரிங்கிட் வரை விற்கப்படுவதாகப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) அதிருப்தி தெரிவித்துள்ளது. 

அண்மையில் பொதுச் சந்தைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அச்சங்கத்தின் வேளாண் கல்வி அதிகாரி திரு. என்.வி. சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 100 கிராம் எடையுள்ள ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, RM3 முதல் RM4 ரிங்கிட் வரை விற்கப்படுவது பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த காலங்களில் தேங்காய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கறிவேப்பிலை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பு ஒரு கிலோகிராம் RM1 ரிங்கிட் என விற்கப்பட வேண்டிய கறிவேப்பிலையின் விலை, தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்களுடைய வீட்டுத் தேவைகளுக்கான காய்கறிகளையும் மூலிகைகளையும் வீடுகளிலேயே பயிரிடுமாறு சுப்பாராவ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, கறிவேப்பிலையை வீட்டில் வளர்ப்பதற்கு வெறும் RM1 ரிங்கிட் மட்டுமே முதலீடாகத் தேவைப்படும் என்றும், இதற்கு அதிக இடமும் தேவைப்படாது என்பதால், இது சிறந்ததொரு சிக்கன நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset