செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: தீர்வு நெருங்கிவிட்டதாக டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் நம்பிக்கை
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுதீன் ஹருன் மீது அம்னோ, தேசிய முன்னணியை சார்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள நம்பிக்கையற்ற சூழல், முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
கூட்டணி அரசுக்குத் தாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், முதலமைச்சர் மீது மட்டுமே தங்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மாநிலத்தின் பாரம்பரியச் சட்டங்கள், 'உண்டாங்' எனப்படும் தலைவர்களின் அதிகாரம் தொடர்பான சிக்கல்களே இந்த அரசியல் நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தன.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, வரும் வாரம் அம்னோ, பக்காத்தான் ஹரப்பான் கட்சிகளின் அரசியல் பீடங்களுக்கு இடையிலான சிறப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
முதலமைச்சரை மாற்றுவதா வேண்டாமா என்பதை பக்காத்தான் ஹரப்பான் தலைமையிடமே விட்டுவிடுவதாகக் கூறிய ஜாஹித் ஹமிடி, தற்போதைய அரசியல் சூழலில் மாநில நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அமினுடின் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்வதைச் சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும், பாரம்பரியத் தலைவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளும் மாநில நிர்வாகத்தைப் பாதித்துள்ளன.
மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்யக் கூட்டணித் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 5:16 pm
நள்ளிரவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 76 வயது மூதாட்டி உயிரிழப்பு
May 3, 2026, 2:13 pm
புக்கிட் பிந்தாங் ‘ரெயின் ரேவ்’ விழாவில் பரபரப்பு: கத்தியுடன் வந்த பெண் கைது
May 3, 2026, 1:47 pm
கல்வி அனைத்து மாணவர்களுக்கான உரிமை; பாகுபாடு பார்க்கப்படாது: ஃபட்லினா சிடேக்
May 3, 2026, 10:25 am
