நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மற்ற இனத்தவர்களை பாதிக்காமல் இந்திய மாணவர்களுக்கு என மெட்ரிகுலேசனில் 2,500 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்: சுரேன் கந்தா

பூச்சோங்:

நாட்டில் மற்ற இனத்தவர்களை பாதிக்காமல் இந்திய மாணவர்களுக்கு என மெட்ரிகுலேசனில் 2,500 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை வலியுறுத்தினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யுத்தம் திட்ட நிகழ்வு பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதில் கலந்து கொண்டுள்ளார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் கல்வியமைச்சர் இவர் தான்.

ஆக அமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டான்ஸ்ரீ தம்பிராஜா சிந்தனையில் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இதுவரை 57,000 பட்டதாரி மாணவர்களை உருவாக்கி உள்ளது.

தற்போது கல்வி யுத்தம் மூலம் நாடு முழுவதும் மாணவர்களிடையே மிகப் பெரிய கல்வி புரட்சியை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்படுத்தி வருகிறது.

கல்வி என்பது ஒவ்வொரு மாணவனின் உரிமையாகும். ஏழ்மை உட்பட இதர காரணங்களால் இக்கல்வி தடைப்படக்கூடாது.

இதுவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முக்கிய இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் தான் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று சுரேன் கந்தா கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில் கல்வியமைச்சர் கலந்து கொண்டுள்ளதால் அவரின் கவனத்திற்கு இரு கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

முதலாவது எஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் நன்னெறி பாடத்தில் ஏ பெறாமல் போகும் விவகாரத்தை கல்வியமைச்சு ஆராய வேண்டும்.

காரணம் நன்னெறி பாடத்தில் ஏ பெறாததால் மாணவர்கள் பல பின்னடைவுகளை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக மெட்ரிகுலேசனுக்கு விண்ணப்பிக்கும் போது சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

ஆக கல்வியமைச்சுக்கு இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

அதே வேளையில் மற்ற இனத்தவர்களை பாதிக்காமல் இந்திய மாணவர்களுக்கு என மெட்ரிகுலேசனில் 2,500 இடங்களை ஒதுக்க வேண்டும்.

இது தகுதியான மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset