செய்திகள் மலேசியா
விபத்தில் 10 வயது சிறுவன் மரணம்: ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது
கம்பார்:
மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 10 வயது சிறுவன் மரணமடைந்த சம்பத்தில் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கம்பார் மாவட்ட போலிஸ் தலைவர் முஹம்மது நஸ்ரி தாவூத் கூறினார்.
இந்த விபத்து இங்குள்ள கோலாலம்பூர் - ஈப்போ சாலையின் 29.4 கிலோமீட்டர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
நான்கு சக்கர வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இரவு சுமார் 10.35 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பெரோடுவா பெஸ்ஸா காரில் பயணித்த அந்தச் சிறுவன், பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், டொயோட்டா ஹைலேக்ஸ் வாகனம் ஒன்று எதிர் திசைப் பாதைக்குள் நுழைவதற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இந்த விபத்தில் சிக்கிய அந்த நான்கு சக்கர வாகனம், பெரோடுவா பெஸ்ஸா மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரண்டு வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தின் விளைவாக, பெரோடுவா பெஸ்ஸாவின் 46 வயது ஓட்டுநர் மற்றும் 13 வயது பயணி ஆகியோர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய டொயோட்டா ஹைலேக்ஸ் வாகனத்தின் 44 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதற்காகக் காவலில் வைக்கப்பட்டார்.
அதே சமயம் அவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
