நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த 20 ஆண்டுகளுக்கான அம்னோவின் ஐந்து முக்கிய நோக்கங்களை ஜாஹித் கோடிட்டுக் காட்டினார்

கோலாலம்பூர்:

கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அடுத்த இருபது ஆண்டுகளுக்கான அம்னோவின் ஐந்து முக்கிய நோக்கங்களை  அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கோடிட்டுக் காட்டினார்.

நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக தக்வாவை வலுப்படுத்துதல்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மையின் தூணாக மாறுதல்.

வல்லுநர்களையும் அறிஞர்களையும் உருவாக்குதல்.

மலாய் தலைமையின் சிந்தனையை ஒன்றிணைத்தல்.

அறிவுக் கலாச்சாரத்தை வளர்த்தல் ஆகியவை அந்த ஐந்து நோக்கங்கள் ஆகும்.

நாட்டை நிர்வகிக்கவும், பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவும், நல்லிணக்கமான பன்மைத்துவ தேசத்தின் தூணாகவும் திகழக்கூடிய, அறிவார்ந்த ஒரு மலாய் இனத்தை உருவாக்குவதே இந்தப் போராட்டத்தின் இறுதி இலக்காகும்.

இஸ்லாமிய விழுமியங்களை இழக்காத, வலுவான அடையாளத்தைக் கொண்ட, நற்பண்புகள் நிறைந்த, புதிய சிந்தனைகளை உருவாக்குபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக திகழக்கூடிய ஒரு மலாய் தலைமுறையின் பிறப்பைக் காண நான் விரும்புகிறேன்.

மலாய் தலைமுறையானது, நம்பிக்கையில் வேரூன்றியதாகவும், செயலில் அறிவார்ந்ததாகவும், படைப்பில் ஆற்றல் மிக்கதாகவும், போராட்டத்தில் பெருந்தன்மை கொண்டதாக இருக்கும்.

தலைமைத்துவத்தில் ஒன்றுபட்டதாக
இருக்க வேண்டும் என்று அம்னோவின் 80ஆவது ஆண்டு மாநாட்டின் நிறைவுரையின்போது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset