செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் 2026: மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை:
மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (மே 2) டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் (1) ஏமாற்றமளித்தாலும், ரையான் ரிக்கெல்டன் (37), நமன் தீர் (57) ஜோடி அணியை மீட்டெடுக்கப் போராடியது.
சூரியகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற நட்சத்திர வீரர்களான திலக் வர்மா (8) கேப்டன் ஹர்திக் பாண்டியா (18) ஆகியோர் வருவதும் போவதுமாக இருந்தனர்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அஹமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
160 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்குத் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியைக் கொடுத்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இம்பாக்ட் பிளேயராக வந்த கார்த்திக் சர்மாவும் இணைந்து அதிரடியாக விளையாடி வெற்றியை எளிதாக்கினர்.
ருதுராஜ் 48 பந்துகளில் 67 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 54 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தைத் தக்கவைத்து தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
அதேசமயம், தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
