செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
டெஹ்ரான்:
அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஈரானிய கால்பந்து அதிகாரிகள் பிபா தலைவர்களைச் சந்திக்க விரும்புகிறார்கள்.
உலக நிர்வாக அமைப்புடன் தனது கட்சி விவாதிக்க வேண்டிய பல முக்கிய விஷயங்கள் இருப்பதாக ஈரான் கால்பந்து சங்கத்தின் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவித்தார்.
இந்த வாரம் கனடாவின் வான்கூவரில் பிபா மாநாடு நடைபெறவுள்ளது.
பிபாவின் 211 உறுப்பு நாடுகளில் ஈரான் மட்டுமே பிரதிநிதிகளை அனுப்பவில்லை.
இந்தக் கூட்டம் மே 20ஆம் தேதிக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள பிபா தலைமையகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பதட்டங்கள் காரணமாக, வட அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் ஈரானின் பங்கேற்பு தொடர்ந்து கவனத்தின் மையமாக இருந்து வருகிறது.
இதனை மையமாக கொண்டு இந்த சந்திப்பு நடைபெறும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 10:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
