நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா

ஹார்சென்ஸ்:

நாளை இங்குள்ள ஃபோரம் ஹார்சென்ஸில் நடைபெறவுள்ள 2026 தோமஸ் கோப்பை காலிறுதிப் போட்டியை எதிர்கொள்ள, தனது சக வீரர்கள் மனதை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாட்டின்  ஆடவர் ஒற்றையர் வீரர் லீ ஜீ ஜியா கோரியுள்ளார்.

குழுப் போட்டிகளை விட, இந்த முறை காலிறுதிச் சுற்று மிகவும் சவாலானதாக இருப்பதாக விவரித்த ஜீ ஜியா, வலுவான மனநிலை அதைச் சமாளிக்க உதவும் என்று தெரிவித்தார்.

"அணிப் போட்டிகளில் இது எளிதானது அல்ல. ஏனெனில், சில நேரங்களில் நாம் வெற்றி பெறுகிறோம், சில முக்கியமான புள்ளிகளில், நாம் தோற்று, வீரர்களின் மனநிலையைப் பாதிக்கிறோம்.

"வெற்றியோ தோல்வியோ அவர்கள் தங்கள் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்," என்று இங்கு சந்தித்தபோது அவர் கூறினார்.

82வது தரவரிசையில் உள்ள இந்த வீரர், நேற்று நடைபெற்ற குழு பி-வின் கடைசிப் போட்டியில், 2014-ஆம் ஆண்டின் சாம்பியனான ஜப்பானிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த போது, மலேசியாவின் இரண்டாவது புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

ஜீ ஜியா, உலகின் 20வது தரவரிசை வீரர் கோகி வதநாபேயை 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில், 41 நிமிடங்களில் எளிதாக வீழ்த்தினார். இதன் மூலம், தனது எதிராளிக்கு எதிரான மூன்று தொடர் தோல்விகளின் பாதகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

மலேசியாவால் ஜப்பானை வெல்ல முடியவில்லை என்றாலும், நாக்-அவுட் கட்டத்தில் தேசிய அணி மிகவும் வலுவாக எழும் என்று 28 வயதான வீரர் நம்பிக்கை தெரிவித்தார்.

அந்த முடிவு, ஜப்பானை குழு பி-வின் வெற்றியாளராக காலிறுதிக்கு உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், 2022 பாங்காக், 2024 செங்டுவில் ஏற்பட்ட இரண்டு முந்தைய பதிப்புகளில் மலேசியாவிடம் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பதிலடியும் கொடுத்தது.

இதற்கு முன்னர், மலேசியா இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கிலும், பின்லாந்தை 4-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி, குழு பி-வின் இரண்டாவது இடத்தைப் பிடித்து, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

நாக்-அவுட் கட்டத்திற்கான அதிர்ஷ்டச் சீட்டு இன்று காலை 10.30 மணிக்கு (மலேசிய நேரம் மாலை 4.30 மணி) நடைபெறும்.

2026 தோமஸ் கோப்பை, இந்த ஏப்ரல் 24 முதல் மே 3 வரை நடைபெறுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset