செய்திகள் உலகம்
காசா உதவிக்கப்பல் இஸ்ரேலால் தடுப்பு: கிரீட் தீவில் 175 ஆர்வலர்கள் தரை இறக்கம்
ஏதென்ஸ்:
காசா பகுதியை நோக்கிச் சென்ற மனிதாபிமான உதவி படகுத் தொடரை, இஸ்ரேல் படைகள் சர்வதேச கடல் பகுதியில் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, அதில் இருந்த சுமார் 175 ஆர்வலர்கள் கிரேக்கத் தீவுகளில் கரை இறக்கப்பட்டனர்.
AFP தகவலின்படி, பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இவ்வார்வலர்கள், கிரேக்கக் கடலோரக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் தீவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் “Free Palestine” என்ற முழக்கத்தையும் எழுப்பினர்.
50க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட இந்த உதவி படகுத் தொடர், மார்செய், பார்சிலோனா, சைரக்கூஸ் ஆகிய நகரங்களில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மீது விதிக்கப்பட்ட முற்றுகையை உடைத்து, அங்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
இதேவேளை, காசா பகுதி 2007ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல அமைப்புகள், 2023 அக்டோபரில் தொடங்கிய மோதலுக்குப் பின்னர் அங்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் கவலை வெளியிட்டு, கைது செய்யப்பட்ட ஆர்வலர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளன. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, இந்த முயற்சியை “கவன ஈர்ப்பு நடவடிக்கை” என விமர்சித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
