செய்திகள் விளையாட்டு
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
வான்கூவர்:
விரிவாக்கப்பட்ட மிகப்பெரிய ஆடவர் போட்டியின் வணிகரீதியான வெற்றியைத் தொடர்ந்து, 2026 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டணத்தை சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (ஃபிஃபா) குறிப்பிடத்தக்க அளவில் கிட்டத்தட்ட AS$871 மில்லியனாக (4.65 பில்லியன் ரிங்கிட்) அதிகரித்துள்ளது.
வான்கூவரில் நடைபெற்ற 76வது ஃபிஃபா காங்கிரஸுக்கு முன்னதாக கூடிய ஃபிஃபா குழு, அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்ற அனைத்து 48 உறுப்பினர் சங்கங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டில் 15 சதவீத அதிகரிப்பை அங்கீகரித்தது.
மொத்தத் தொகை இப்போது AS871மில்லியனாக(4.65பில்லியன் ரிங்கிட்), ஒவ்வொரு அணிக்கும் முன்னர்AS1.5 மில்லியன் (8.01 மில்லியன் ரிங்கிட்) இருந்த நிலையில், இப்போது அதிக தயாரிப்புக் கட்டணமாக AS$2.5 மில்லியன் (13.35 மில்லியன் ரிங்கிட்) வழங்கப்படுகிறது.
மேலும், தகுதிக் கட்டணமும் AS9மில்லியனில்(48.06மில்லியன் ரிங்கிட்) இருந்து AS10 மில்லியனாக (RM53.40 மில்லியன்) உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஃபிஃபா, அணி பிரதிநிதிகள் செலவுகளுக்கான மானியங்கள், AS$16 மில்லியனுக்கும் (85.44 மில்லியன் ரிங்கிட்) அதிகமான டிக்கெட் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை வழங்குகிறது.
"வரலாற்றில் மிகவும் வலுவான நிதி நிலையில் இருப்பதில் ஃபிஃபா பெருமிதம் கொள்கிறது. இது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து உறுப்பினர் சங்கங்களுக்கும் உதவ அனுமதிக்கிறது" என்று ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கூறினார்.
"ஃபிஃபாவின் மூலம் கிடைக்கப்பெறும் லாபங்கள் மீண்டும் கால்பந்து வளர்ச்சிக்கே முதலீடு செய்யப்படுகின்றன," என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னர் 32 அணிகள் இருந்த நிலையில், இப்போது 48 அணிகளாக விரிவாக்கப்பட்ட 2026 உலகக் கோப்பைப் போட்டி, வட அமெரிக்கா முழுவதும் நீண்ட பயணத் தொலைவுகள், வரி வேறுபாடுகள், அதிக இயக்கக் கோரிக்கைகளுடன் மிகவும் சவாலான பயணத்தைக் காணவுள்ளது.
சில ஐரோப்பிய அணிகள், போட்டியில் வெகுதூரம் முன்னேறவில்லை என்றால், நிதி ரீதியாக வருமானத்தை அடைவது கடினமாக இருக்கும் என்று ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யூஈஃப்ஏ) முன்னர் கவலை தெரிவித்திருந்தது.
2026 ஆம் ஆண்டுப் போட்டியே, 48 அணிகள் பங்கேற்கும் முதல் ஆடவர் உலகக் கோப்பையாக இருக்கும். போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும். இது ஃபிஃபா வரலாற்றில் மிகப்பெரிய, மிகவும் இலாபகரமான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 27, 2026, 9:56 am
2026 கிராஸ்ஹோப்பர் கிண்ணத்தை சிவசங்கரி வென்றார்
April 27, 2026, 9:51 am
ரொனால்டோ ஒரு சிறப்பான பருவத்தை அனுபவித்து வருகிறார்: லா லீகாவில் அல்மேரியா
April 27, 2026, 9:45 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: இறுதியாட்டத்தில் செல்சி
April 26, 2026, 9:02 am
