நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?

மாட்ரிட்:

அடுத்த சீசனுக்கான புதிய மாற்று பயிற்சியாளரை பரிசீலித்து வரும் நிலையில், ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் திரும்புவதற்கான முன்னணி வேட்பாளராக ஜோஸ் மோரின்ஹோ உருவெடுத்துள்ளார்.

சந்தியாகோ பார்னபவ் அரங்கிற்கு  அந்தப் போர்த்துகல் பயிற்சியாளர் திரும்புவதற்கு கிளப் தலைவர் புளோரென்டினோ பெரெஸ் மிக வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார்.

கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்ட பிறகு, மோரின்ஹோ தற்போது பென்பிகா அணியின் பொறுப்பில் உள்ளார்.

மேலும் அவர் இதுவரை ஒரு உள்நாட்டு லீக் போட்டியிலும் தோற்கவில்லை.

முன்னாள் செல்சி, மென்செஸ்டர் யுனைடெட் மேலாளரான இவர், இதற்கு முன்பு 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணியை நிர்வகித்தார்.

அப்போது அந்த அணி லா லீகா, கோபா டெல் ரெய் கிண்ணங்களை வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset