செய்திகள் உலகம்
அமெரிக்காவிற்கு அனுப்பிய 625,000 அமெரிக்க டாலர் பணம் மாயம் : வங்கி கணக்கு மாற்றப்பட்டதாக கூறி இணைய மோசடி
கொழும்பு:
இலங்கை அஞ்சல் துறையினரால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 625,000 அமெரிக்க டாலர் பணம் தமக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளதாக இலங்கை அஞ்சலகத் தலைவர் ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களம் பணத்தைச் செலுத்தியுள்ள போதிலும், அந்த நிதி தமக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இது ஒரு 'பிஷிங்' (Phishing) அல்லது இணைய மோசடி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வங்கிக் கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டதாக மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், குறித்த வங்கிக் கணக்கு தற்போது செயலிழந்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
