செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
சிரம்பான்:
தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, தனது கட்சிக்கும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் இதனை உறுதிப்படுத்தினார்.
தமக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறும் முடிவு குறித்து விளக்கம் பெறுவதற்காக, கடந்த திங்கட்கிழமை தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள மட்டுமே முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
தேசியக் கூட்டணி பிரதிநிதிகள் உட்பட எந்தவொரு கட்சியுடனும் ஏதேனும் ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தைகள் இருந்தால், அதற்கு முதலில் கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆக ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:04 pm
5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது
April 29, 2026, 4:46 pm
உறவினர்களிடமே கைவரிசையைக் காட்டிய ஆடவர்
April 29, 2026, 4:07 pm
நாட்டில் O, A ரத்த வகைகளின் விநியோகம் குறைந்து வருகிறது
April 29, 2026, 3:38 pm
டிஜிட்டல் மயம் சேமிப்பைக் குலைக்கிறதா?
April 29, 2026, 2:56 pm
