செய்திகள் மலேசியா
உறவினர்களிடமே கைவரிசையைக் காட்டிய ஆடவர்
பத்து பஹாட்:
கடந்த வாரம் சுமார் 15,000 ரிங்கிட் மதிப்பிலான தங்கக் காப்புகளைக் கொள்ளையடித்த சந்தேக நபர், தங்களின் சொந்த சகோதரர் மகன் என்று ஒரு முதிய தம்பதியினர் எதிர்பார்க்கவில்லை.
71 வயதுடைய பாதிக்கப்பட்டவரை 80களில் இருக்கும் தனது கணவருடன் வீட்டில் இருந்த போது, ஏப்ரல் 20 ஆம் தேதி, மதியம் 1 மணியளவில், ஒரு முகமூடி அணிந்த நபர் அவர்களை அணுகியுள்ளார்.
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவர் முதலில், சந்தேக நபர் முகமூடி அணிந்திருந்ததால், அவர் ஒரு அடையாளம் தெரியாத நபர் என்று நினைத்தார்.
தொழிற்சாலையில் பணிபுரியும் சந்தேக நபர், அந்த வீட்டிற்கு அருகில் ஒரு காரில் காத்திருந்த தனது மனைவியுடன் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர், பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி, அதன் பின்னர் போலிஸ் புகாரைப் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, பத்து பஹாட் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் (ஐபிடி) சிறப்பு/கடுமையான குற்றப் புலனாய்வுப் பிரிவைச் (D9) சேர்ந்த போலிஸ் குழு ஒன்று, விசாரணை நடத்தி, நேற்று மதியம், சிலாங்கூரின் கிள்ளானில் உள்ள அவர்களின் வீட்டில் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தது.
இதற்கிடையில், சந்தேக நபரும், அவரது மனைவியும் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395-ன் கீழ் விசாரணை நடத்துவதற்கும், இரு சந்தேக நபர்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கும், மாஜிஸ்திரேட் நுராசிதா ஏ. ரஹ்மான் தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:19 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:04 pm
5 மாநிலங்களில் கைவரிசை காட்டிய 'லோன் ஷார்க்' கும்பல்: ஜொகூர் போலிசாரால் அதிரடியாக கைது
April 29, 2026, 4:07 pm
நாட்டில் O, A ரத்த வகைகளின் விநியோகம் குறைந்து வருகிறது
April 29, 2026, 3:38 pm
டிஜிட்டல் மயம் சேமிப்பைக் குலைக்கிறதா?
April 29, 2026, 2:56 pm
