செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு; பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
மஇகா பணிப்படை, எம்ஐஇடி ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர்,
உங்களின் எதிர்காலம் உங்கள் கையில் என்ற கொள்கையோடு பெற்றோர், ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டெழுங்குடன் தங்களது பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர்களின் பேச்சை கேட்டும் நடக்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டாலே போதும்.
இல்லையெனில் நீளம் சட்டை அணிந்த காவல் துறையின் பேச்சை தான் கேட்க வேண்டி வரும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கூடாத நட்பு வேண்டாம். அது உங்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும்.
ஆகவே மாணவர்கள் உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்துங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நன்றாக படித்து பல்கலைக்கழகம் வரை செல்லுங்கள்.உங்களை வரவேற்க ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே இது போன்ற கருத்தரங்கை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளேன்.
அதே வேளையில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனிடமும் பேசினேன்.
இந்த கருத்தரங்கை மஇகா தான் நடத்த வேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் நடத்தலாம்.
ஆனால் இதன் மூலம் சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 2:56 pm
நள்ளிரவில் அதிரடிச் சோதனை: 46 வெளிநாட்டவர்கள் குடிவரவுத் துறையினரால் கைது
April 29, 2026, 2:39 pm
தந்தையின் போதை வெறிக்குக் குழந்தை பலியா?
April 29, 2026, 2:32 pm
வங்கிப் பணிகளை முடித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: வழிப்பறி திருடனுக்கு போலிஸ் வலைவீச்சு
April 29, 2026, 1:01 pm
மலேசியாவில் உள்ள 14 பகுதிகள் வெப்பமான வானிலையைப் பதிவு செய்துள்ளன
April 29, 2026, 11:49 am
நம்பிக்கையில்லாத் தீர்மானமே நெகிரி செம்பிலான் அம்னோவின் நடவடிக்கை சரியான நகர்வாகும்: கைரி
April 29, 2026, 11:08 am
