நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு; குற்றமற்ற தலைமுறையை உருவாக்குவதே இலக்கு: ஆண்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர்:

குற்றமற்ற தலைமுறையை உருவாக்கும் இலக்குடன் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மஇகா பணிப்படை தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான ஆண்ட்ரூ டேவிட் இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் குற்றமற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் போலிஸ்படையுடன் இணைந்து மஇகா பணிப்படை இம்முயற்சியை மேற்கொண்டது
 
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய  குற்றங்களை துணிச்சலுடன் நிராகரிக்கும், எளிதில் பாதிக்கப்படாத, குற்றங்களின் பலியாகாமல் தற்காத்துக் கொள்ளும் இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

எம்ஐஇடி ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் நிறைவு விழாவிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் சிறப்பு வருகை புரிந்தார்.

மேலும் கோலாலம்பூர் போலிஸ்படையின் துணைத் தலைவர் டத்தோ முகமத் அஸ்னி ஒமார் தலைமையேற்றார்.

PULAPOL  மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளில் இருந்தும் மாணவர்களும் பங்கேற்றனர்.

குறிப்பாக 6ஆம் ஆண்டு மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்ப்பள்ளியை முடித்து இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த குற்ற செயல்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்
இதனை அடிப்படையாக கொண்டே இக்கருத்தரங்கு நடைபெறுகிறது என்று ஆண்ட்ரூ டேவிட் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset