நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையில்லாத் தீர்மானமே நெகிரி செம்பிலான் அம்னோவின் நடவடிக்கை சரியான நகர்வாகும்: கைரி

கோலாலம்பூர்:

நம்பிக்கையில்லாத் தீர்மானமே நெகிரி செம்பிலான் அம்னோவின் நடவடிக்கை சரியான நகர்வாக இருக்கும்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

மந்திரி புசாருக்கான ஆதரவை நெகிரி செம்பிலான் அம்னோ திரும்பப் பெற்றதை ஒரு துல்லியமான அரசியல் முடிவாகும்.

இது தொடர்பில் நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ், நெகிரி செம்பிலானின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும் அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் வெளியான அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த கைரி, அடுத்தகட்ட நடவடிக்கையை மாநில சட்டமன்றத்தில் இன்னும் முறையாக எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

நெகிரி செம்பிலான் அம்னோ எடுத்தது ஒரு நல்ல நடவடிக்கை. 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடத்தப்படுவதை சாத்தியமாக்க, ஒரு அமர்வைக் கூட்டுமாறு அவர்கள் சட்டமன்ற சபாநாயகருக்கு மற்றொரு கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

வரலாற்று காரணங்களால் நம்பிக்கை கூட்டணியால் அடிக்கடி நிராகரிக்கப்படும் சத்திய பிரமாணப் பத்திரத்தின் யன்பாடு குறித்த சர்ச்சையையும் அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், பெரும்பான்மை ஆதரவைத் தீர்மானிப்பதற்கு பிரமாணப் பத்திரம்  ஒரு செல்லுபடியாகும் முறையாகும் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset