நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்கிப் பணிகளை முடித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: வழிப்பறி திருடனுக்கு போலிஸ் வலைவீச்சு

பாலிங்:

கெடா மாநிலம், பாலிங் பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக நேற்று பிற்பகல் நடைபெற்ற துணிகர வழிப்பறிச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

நேற்று மதியம் 2.55 மணியளவில், 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வங்கியில் தனது பணிகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் கைப்பையைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். 

இந்தத் திடீர் தாக்குதலால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்த போதிலும், நல்வாய்ப்பாக அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டென்ட் பிராண்டன் அனாக் ரிச்சர்ட் ஜோ தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 392-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபரைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வழிப்பறிச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாகப் பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க மக்கள் பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset