நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுமார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான  1 எம்டிபி நிதிகளுக்கு எம்ஏசிசி தடை உத்தரவைப் பெற்றுள்ளது

புத்ராஜெயா:

சுமார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான  1 எம்டிபி நிதிகளுக்கு எம்ஏசிசி தடை உத்தரவைப் பெற்றுள்ளது.

இந்தத் தடை உத்தரவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹமீத் நேற்று பிறப்பித்தார்.

1 எம்டிபி நிறுவனத்திலிருந்து முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட நிதிகள் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும், 

பார்படாஸில் உள்ள அமிகார்ப் பேங்க் நிறுவனத்தின் இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி தடுப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டத்தின் கீழ் அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவில், கேள்விக்குரிய நிதிகள் சட்டவிரோத பண நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று நீதிபதி திருப்தி அடைந்த பின்னரே இது உத்தரவு வழங்கப்பட்டது.

இந்தப் பணம் எம்ஏசி சிறப்பு நடவடிக்கைப் பிரிவு நடத்திய ஒரு விசாரணையைத் தொடர்ந்து கிடைத்தது. 

அந்த விசாரணையில், 2014, 2019-க்கு இடையில், வெளிநாடுகளில் நிறுவப்பட்ட பல நிறுவனங்களின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், இயக்குநர்களாக இருந்த பல நபர்கள், பார்படாஸில் உள்ள அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பணத்தைப் பெறுதல், மறைத்தல், மாற்றுதல் மற்றும் கைமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு நிதியையும் கண்டறிந்து நாட்டிற்குத் திருப்பியனுப்புவதை உறுதி செய்வதில் எம்ஏசிசி கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று அதன் ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset