செய்திகள் மலேசியா
தந்தையின் போதை வெறிக்குக் குழந்தை பலியா?
லாவாஸ்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை, லாவாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட சிசுவின் உடம்பிலிருந்த காயங்கள் ஒரு சாதாரண விபத்தின் விளைவாக ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகித்து, புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் அம்பலமானது.
இரவு 10.45 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் சளி, இருமல் காரணமாக, அந்தக் குழந்தையின் தாய் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக லாவாஸ் மாவட்ட போலிஸ் தலைவர் துணை சூப்பிரண்டெண்டன் லியோங் டிண்டன் தெரிவித்தார்.
"இருப்பினும், மருத்துவ அதிகாரி மேற்கொண்ட மேலதிகப் பரிசோதனையில், பாதிக்கப்பட்டவரின் உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட குழந்தை உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்," என்று அவர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
புகாரைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில், குழந்தையின் தந்தையுமான 28 வயதுடைய ஆடவர் ஒருவரைப் போலிஸார் அவரது இல்லத்தில் கைது செய்தனர்.
"ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபருக்கு ஆம்ப்ஃபெட்டமைன் (Amp), மெதாம்பேட்டமைன் (Meth) வகை போதைப்பொருட்கள் அதிகமாக இருப்பதைக் காட்டின" என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட குழந்தை இன்னும் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) கீழும், மேலும் 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a) கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
"சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ள பொதுமக்கள், விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்றார் அவர்.
பெற்ற பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறு பாதகமாக அமைவது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எத்ரிகாலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 2:56 pm
நள்ளிரவில் அதிரடிச் சோதனை: 46 வெளிநாட்டவர்கள் குடிவரவுத் துறையினரால் கைது
April 29, 2026, 2:32 pm
வங்கிப் பணிகளை முடித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: வழிப்பறி திருடனுக்கு போலிஸ் வலைவீச்சு
April 29, 2026, 1:01 pm
மலேசியாவில் உள்ள 14 பகுதிகள் வெப்பமான வானிலையைப் பதிவு செய்துள்ளன
April 29, 2026, 11:49 am
நம்பிக்கையில்லாத் தீர்மானமே நெகிரி செம்பிலான் அம்னோவின் நடவடிக்கை சரியான நகர்வாகும்: கைரி
April 29, 2026, 11:08 am
