நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் உள்ள 14 பகுதிகள் வெப்பமான வானிலையைப் பதிவு செய்துள்ளன

கோலாலம்பூர்: 

இன்று காலை 6 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் உள்ள மொத்தம் 14 பகுதிகள் நிலை 1 அல்லது எச்சரிக்கை வகை வெப்பமான வானிலையைப் பதிவு செய்துள்ளன.

பெர்லிஸ், கெடாவில் கூபாங் பாசு, பெண்டாங், கோத்தா செத்தார், பாடாங் தெராப்; பேராக்கில் கோலா கங்ஸார், உலு பேராக்; கிளாந்தானில் ஜெலி, பாசிர் மாஸ், தானா மேரா, மாச்சாங்; கோலாலம்பூர், சிலாங்கூரில் கோம்பாக், சிப்பாங் ஆகிய பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சபாவில் பியூஃபோர்ட், தெலுப்பிட் ஆகிய இரண்டு பகுதிகளும், சரவாக்கில் லிம்பாங்கும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறைந்தது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக, அதிகபட்ச தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை உயரும் போது, நிலை 1 (எச்சரிக்கை) நிலை வெளியிடப்படும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

வெப்பமான வானிலை நிலை குறித்த சமீபத்திய தகவல்களை, பொதுமக்கள் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my மூலம் காணலாம்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset