செய்திகள் மலேசியா
புன்சாக் ஆலாமில் கால்வாயில் விழுந்த 10 வயது சிறுவன் காணாமல் போனான்
ஷாஆலம்:
புன்சாக் ஆலாமில் கால்வாயில் விழுந்த 10 வயது சிறுவன் காணாமல் போனான்.
நேற்று மாலை பண்டார் புஞ்சாக் ஆலாம், லோரோங் கச்சேரா பூர்ணமாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கால்வாயிலில் தவறி விழுந்த 10 வயது சிறுவன், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இரவு 7.47 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது.
பெஸ்டாரி ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் ஆறு பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டனர்.
பிற்பகல் 3.30 மணியளவில் பாதிக்கப்பட்டவர் ஒரு வடிகாலில் தவறி விழுந்ததாகவும், கனமழையின் போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புத் துறையினரின் தேடுதல், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 11:49 am
நம்பிக்கையில்லாத் தீர்மானமே நெகிரி செம்பிலான் அம்னோவின் நடவடிக்கை சரியான நகர்வாகும்: கைரி
April 29, 2026, 11:08 am
நெகிரி செம்பிலானில் அரசியல் நெருக்கடி: சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட அம்னோ கோரிக்கை
April 29, 2026, 11:06 am
சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான அவமதிப்புகள் தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டது: ரோய்
April 29, 2026, 10:30 am
உற்பத்தி, சேவைத் துணைத்துறைகளை வலுப்படுத்த உதவும் புதிய முன்முயற்சிகள்: அமிருதீன்
April 29, 2026, 10:15 am
புனித யாத்திரையிலும் வணிக மோசடி: பணத்தை இழந்து தவிக்கும் முதியவர்
April 29, 2026, 10:02 am
