நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சண்டாக்கானில் பரபரப்பு: நள்ளிரவு தீ விபத்தில் 30 வீடுகள் சாம்பல்

சண்டாக்கான்:

சபா மாநிலம், சண்டாக்கான் மாவட்டத்தில் உள்ள காராமுண்டிங் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 30 வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. 

இன்று அதிகாலை 3.34 மணியளவில் தீயணைப்பு, மீட்புத் துறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, 21 வீரர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 1.4 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்த இந்தத் தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் இருந்த தண்ணீர், பொதுத் தீயணைப்பு குழாய்களைப் பயன்படுத்திப் போராடினர். 

சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், அருகில் இருந்த சுமார் 100 வீடுகள் தீக்கிரையாவதிலிருந்து பாதுகாக்கப்பட்டன.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு நிலையத் தலைவர் ஜிம்மி லகுங் தெரிவித்தார். அதிகாலை 7 மணியளவில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இந்த நடவடிக்கையில் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை, கடற்படை, தன்னார்வத் தொண்டர் படையினர் (RELA) எனப் பல தரப்பினர் உதவினர்.

சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உடைமைகளை இழந்த கிராம மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset