நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான அவமதிப்புகள் தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டது: ரோய்

கிள்ளான்:

சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான அவமதிப்புகள் தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டது.கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்  ரோய் ஞானேஸ்வரன் இதனை கூறினார்.

சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக அவமதிப்புகள் பரப்பப்படுவது தொடர்பாக தென் கிள்ளான் போலிஸ் நிலையத்தில் இப்புகார்  தாக்கல் செய்யப்லட்டது.

சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாகக் கூறப்படும் ஒரு முகநூல் கணக்கிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி 24க்கும் மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டன.

இந்தப் பொறுப்பற்ற செயல், அரச நிறுவனத்தின் கண்ணியத்தைக் கெடுக்கும் ஒரு வரம்பு மீறிய செயலாகும். மேலும் இந்த நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டதாக விவரிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் 3ஆர் தொடர்பான உணர்வுகளை தொடுகிறது. இது மக்களின் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

இது தொடர்பாக போலிஸ், எம்சிஎம்சி, உள்துறை அமைச்சு ஆகியவை ஒரு முழுமையான, நியாயமான, வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோய் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset