நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புனித யாத்திரையிலும் வணிக மோசடி: பணத்தை இழந்து தவிக்கும் முதியவர்

கூச்சிங்: 

புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதியைப் பெறுவதற்கும், அங்கு ஹோட்டல் வணிகத்திலும் சலுகை கிடைக்க உதவுவதாக நம்பிக்கையை ஆயுதமாக்கிய  மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டதில், முதியவர் ஒருவர் 415,000 ரிங்கிட் இழந்துள்ளார்.

62 வயதுடைய பாதிக்கப்பட்டவர், அக்டோபர் 30, 2024 அன்று, மக்காவின் க்ளாக் டவர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், சந்தேக நபரைச் சந்தித்ததாகக் கூச்சிங் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் அலெக்சன் நாகா சாபு தெரிவித்தார்.

"ஹஜ் காலத்திலும், உம்ராவிலும் பயணிகளின் தங்குமிடத்திற்கான ஹோட்டல் வணிகத்தில் பங்கேற்கும் வாய்ப்புடன், ஹஜ் அனுமதியைப் பெறுவதற்கான உதவியையும் சந்தேக நபர் வழங்கினார்.

"அந்தச் சலுகையில் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், இரண்டு வெவ்வேறு வங்கிகளுக்கு, இணையம் வழி ஆறு முறை பணம் செலுத்தியுள்ளார்" என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நவம்பர் 10, 2024 அன்று, பாதிக்கப்பட்டவர் கூச்சிங்கில் உள்ள தனது இல்லத்தில் இருந்த போது முதல் தொகையை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

"இதனால் பாதிக்கப்பட்டவர் மொத்தம் 415,000 ரிங்கிட் இழப்பைச் சந்தித்துள்ளார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார் அவர்.

ஆசை வலையில் சிக்கிய அந்த முதியவரின் நம்பிக்கை அனைத்தும் பொய்யாக மாறியபோது, அவரின் வாழ்நாள் சேமிப்பு கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்துவிட்டது என்பது வேதனையான உண்மை.

தற்போது அதிகமாக நிலவி வரும் இவ்வகையான மோசடியில் சிக்காமல் இருக்க அதிகாரப்பூர்வமாக அனைத்து தரவுகளையும் சரிப்பார்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset