செய்திகள் மலேசியா
அரச நிறுவனங்களுக்கு எதிரான அவமதிப்புகளை சிலாங்கூர் மாநில மஇகா வன்மையாகக் கண்டிக்கிறது: டத்தோ சங்கர் ஐயங்கார்
ஷாஆலம்:
அரச நிறுவனங்களுக்கு எதிரான அவமதிப்புகளை சிலாங்கூர் மாநில மஇகா வன்மையாகக் கண்டிக்கிறது.
சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் இதனை கூறினார்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா உட்பட சிலாங்கூர் அரச நிறுவனங்களை அவமதிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்பும் பிரச்சினையை இது தீவிரமாகக் கருதுகிறது.
அரச நிறுவனங்களை அவமதிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றும், திருத்தும் அல்லது பரப்பும் எந்தவொரு தரப்பினரின் செயல்கள் கண்டிக்கத்தக்கது.
இந்தச் செயல். பொறுப்பற்றது என்பது மட்டுமல்லாமல், ருக்குன் நெகாரா கொள்கைக்கும், குறிப்பாக ஆட்சியாளர், அரசு மீதான விசுவாசத்திற்கும் முரணானது.
அரச நிறுவனம் என்பது மாநில இறையாண்மையின் குடை, மக்களின் ஒற்றுமையின் சின்னமாகும். சிலாங்கூரில் உள்ள பன்மைத்துவ சமூகத்தின் நிலைத் தன்மைக்கான தூண் ஆகும்.
மதிக்கப்பட வேண்டிய நிறுவனங்களை அவமதிப்பதற்கோ, அவதூறு செய்வதற்கோ அல்லது சீண்டுவதற்கோ கருத்துச் சுதந்திரத்தை ஒரு உரிமமாகப் பயன்படுத்த முடியாது.
ஆக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளவர்களையும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் மேலும் முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 11:49 am
நம்பிக்கையில்லாத் தீர்மானமே நெகிரி செம்பிலான் அம்னோவின் நடவடிக்கை சரியான நகர்வாகும்: கைரி
April 29, 2026, 11:08 am
நெகிரி செம்பிலானில் அரசியல் நெருக்கடி: சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட அம்னோ கோரிக்கை
April 29, 2026, 11:06 am
சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான அவமதிப்புகள் தொடர்பில் போலிசில் புகார் செய்யப்பட்டது: ரோய்
April 29, 2026, 10:45 am
புன்சாக் ஆலாமில் கால்வாயில் விழுந்த 10 வயது சிறுவன் காணாமல் போனான்
April 29, 2026, 10:30 am
உற்பத்தி, சேவைத் துணைத்துறைகளை வலுப்படுத்த உதவும் புதிய முன்முயற்சிகள்: அமிருதீன்
April 29, 2026, 10:15 am
புனித யாத்திரையிலும் வணிக மோசடி: பணத்தை இழந்து தவிக்கும் முதியவர்
April 29, 2026, 10:02 am
