செய்திகள் உலகம்
ஊழல் வழக்கில் முதல் பெண்மணிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்த சியோல் நீதிமன்றம்
சியோல்:
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு எதிரான ஊழல் வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நான்கு ஆண்டுகளாக உயர்த்தி சியோல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இவருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தண்டனை காலத்தை நீதிமன்றம் அதிகரித்துள்ளது.
முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவியான கிம் கியோன் ஹீ, பங்குச் சந்தையில் விலைகளைக் கையாண்டு மோசடி செய்தது, 'யூனிஃபிகேஷன் சர்ச்' எனும் அமைப்பிடமிருந்து சட்டவிரோதமாக விலையுயர்ந்த சொகுசுப் பரிசுகளைப் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் குழு, கிம் கியோன் ஹீக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தனர்.
நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தென் கொரிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
