நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய மோசடியால் 290 கோடி இழப்பு: எச்சரிக்கும் அமைச்சர் டத்தோ ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மலேசியாவில் இணையவழி மோசடிகளால் மக்கள் சுமார் RM290 கோடி ரிங்கிட் (RM 2.9 billion) தொகையை இழந்துள்ளதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தல் என்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் எச்சரித்துள்ளார். 

கூகுள் நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய-பசிபிக் இணையப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், இந்த இழப்பு கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

மோசடி செய்யப்பட்ட இந்தத் பெருந்தொகை, நாட்டின் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை என்று அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். 

குறிப்பாக, தற்போதைய நவீன காலத்தில் 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மிகவும் நுணுக்கமாக மக்களை ஏமாற்றுவதாகவும், இதனைத் தடுக்க அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் தேசிய மோசடி மறுமொழி மையத்துடன் (NSRC) கூகுள் நிறுவனம் இணைந்து செயல்படுவதை அமைச்சர் வரவேற்றார். இணைய வசதி அனைவருக்கும் கிடைப்பது மட்டும் போதாது, அந்த இணையதளங்கள் மக்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி, உளவியல் ரீதியான உதவிகளை வழங்க வேண்டியது அவசியம் என்றும், எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் இத்தகைய குற்றக் கும்பல்களை ஒடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் அமைச்சர் ஃபஹ்மி தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset