நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹரூணிடமிருந்து 14 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை இதுவரை எழவில்லை.

நெகிரி செம்பிலானின் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் சட்டப்படி மற்ற செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.

அதே வேளையில், நிர்வாகம் தொடர்ந்து செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆகையால் இதுவரை சட்டமன்றத்தை கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை.

மேலும் நெகிரி செம்பிலான் சட்ட அமைப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் சிறப்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இடம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset