செய்திகள் மலேசியா
சுமார் 15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு: கேஎல்ஐஏ, நெகிரி செம்பிலானில் இரண்டு பெண்கள் கைது
ஷாஆலம்:
கேஎல்ஐஏ, நெகிரி செம்பிலானில் சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளின் மூலம், 14.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 183.7 கிலோகிராம் கஞ்சா பூக்களைப் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலை சிலாங்கூர் போலிஸ்படை முறியடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21, 23 ஆகிய தேதிகளில் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ், கேஎல்ஐஏ துணை போலிஸ்படையுடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டது.
இதன் விளைவாக இந்தக் கும்பலின் முக்கிய கடத்தல்காரர்களாக கருதப்பட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் ஷாசாலி கஹார் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21ஆக் தேதி கேஎல்ஐஏ போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலிஸ் அதிகாரிகள் நெகிரி செம்பிலான், மாம்பாவ் அருகே ஒரு உள்ளூர் பெண்ணைக் கைது செய்தனர்.
அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையில் 153.7 கிலோ எடையுள்ள, 12.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 289 பொட்டலங்கள் கொண்ட கஞ்சா பூக்கள் அடங்கிய 18 சாக்குகள் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டாவது சோதனையின்போது கேஎல்ஐஏ போலிஸ்படையினர் 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, 30 கிலோ எடையுள்ள 60 பொட்டலங்கள் கொண்ட போதைப்பொருள் அடங்கிய இரண்டு பயணப் பெட்டிகளை கண்டறிந்தனர்.
அந்த பெட்டிகளின் உரிமையாளரான ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
34 மற்றும் 24 வயதுடைய அந்த இரண்டு சந்தேக நபர்களும் முறையே உள்ளூர், வெளிநாட்டுக் குடிமக்கள் ஆவர்.
கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண், இலவச விமானப் பயணச் செலவுகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வெகுமதிகளை எதிர்பார்த்து, போதைப்பொருளை வெளிநாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு முன்பு மலேசியாவை ஒரு இடைவழி இடமாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 5:55 pm
700 கி.மீ பாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: குடும்பத்தைக் காண வந்த அதிகாரி விபத்தில் பலி
April 28, 2026, 5:38 pm
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு சட்ட வழிகள் மூலம் தீர்வு காணப்படும்: ஜாஹித்
April 28, 2026, 5:37 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை: பிரதமர்
April 28, 2026, 5:35 pm
