செய்திகள் மலேசியா
வேலைவாய்ப்பில் புதிய திட்டம்: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் விதித்துள்ள அதிரடி நிபந்தனை
கோலாலம்பூர்:
மலேசியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள், உள்ளூர் திறமையாளர்களுக்கு உயர்தரப் பயிற்சிகளை வழங்குவது இனி கட்டாயமாக்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
வெறும் அடிப்படைப் பயிற்சிகளுடன் நின்றுவிடாமல், உலக அளவில் மலேசியர்களுக்குப் போட்டித்திறனை வழங்கும் வகையிலான பயிற்சிகளையே அரசு எதிர்பார்ப்பதாக அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் துறைகளுடன் சேர்த்து, எண்ணெய், எரிவாயு, வேதியியல் துறைகளிலும் இந்த நிபந்தனை பொருந்தும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் உயர்தொழில்நுட்ப முதலீடுகளுக்குத் தேவையான மனிதவளத்தை உள்நாட்டிலேயே உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மலேசியா வெறும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டும் இல்லாமல், அத்துறையில் உலகிற்குத் தலைமை தாங்கும் நாடாக உருவெடுக்க வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
இதற்காக, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) தனித் துறைகளைத் தொடங்கி, மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசின் 'இறையாண்மை மிக்க ஏ.ஐ கிளவுட்' (Sovereign AI Cloud) திட்டம் குறித்து நிலவும் குழப்பங்களுக்கும் பிரதமர் விளக்கம் அளித்தார். இத்திட்டம் வெளிநாட்டு முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தரவுகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களின் சொந்த மேகக்கணி (Cloud) கட்டமைப்புகளை உருவாக்கத் தடையேதும் இல்லை என்றும், பாதுகாப்பு விவகாரங்களில் மட்டுமே அரசு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 5:55 pm
700 கி.மீ பாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: குடும்பத்தைக் காண வந்த அதிகாரி விபத்தில் பலி
April 28, 2026, 5:38 pm
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு சட்ட வழிகள் மூலம் தீர்வு காணப்படும்: ஜாஹித்
April 28, 2026, 5:37 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை: பிரதமர்
April 28, 2026, 5:35 pm
