நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி; தேசியக் கூட்டணியின் விளக்கத்திற்காக காத்திருக்கிறோம்: டான்ஶ்ரீ மொஹைடின்

புத்ராஜெயா:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி தேசியக் கூட்டணியின் விளக்கத்திற்காக காத்திருக்கிறோம்.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொஹைடின் யாசின் இதனை கூறினார்.

இந்த மோதலில் பெர்சத்து மட்டுமல்ல, பாஸ் கட்சியும் ஈடுபட்டுள்ளது. இது தேசியக் கூட்டணியின் தகுதியில் கையாளப்படுகிறது.

இது பெர்சத்துவின் பிரச்சினை மட்டுமல்ல. இது பாஸ் கட்சியின் பிரச்சினையும் கூட. நாங்கள்  தேசியக் கூட்டணி பெயரில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம்.

எனவே தேசியக் கூட்டணி தலைவர், பொதுச்செயலாளரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியாவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் தேசியக் கூட்டணி பொதுச்செயலாளர், டத்தோஶ்ரீ  தக்கியூடின் ஹசானிடம் கேட்கலாம்.

இன்று இங்குள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களைச் சந்தித்தபோது டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset