செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு சட்ட வழிகள் மூலம் தீர்வு காணப்படும்: ஜாஹித்
சைபர்ஜெயா:
நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு அரசியல் வழிகள் மூலம் தீர்வு காணப்படும்.
மாநில அரசின் நிலைத்தன்மை பேணப்படுவதை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டங்களுக்கு இணங்கி அம்முயற்சி மேற்கொள்ளப்படும் என டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி உறுதியளித்தார்.
ஒரு வலுவான மாநில அரசை அமைப்பதற்கான சிறந்த தீர்வைக் காண்பதே தற்போதைய முன்னுரிமையாகும்.
அதன் மூலம் அது மக்களின் பிரச்சினைகளையும் நலனையும் தொடர்ந்து கவனிக்க முடியும்.
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாநில சட்டமன்றத்தின் விதிமுறைகளையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்.
நாம் நெகிரி செம்பிலான் அரசியலமைப்பையும், குறிப்பாக நெகிரி செம்பிலானில் உள்ள சட்டமன்ற விதிமுறைகளையும் பின்பற்றுவோம்.
இது அவ்வளவு எளிதல்ல. அனைத்து விதிமுறைகளும் முதலில் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, அனைத்து விதிகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதே சிறந்ததாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 5:55 pm
700 கி.மீ பாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: குடும்பத்தைக் காண வந்த அதிகாரி விபத்தில் பலி
April 28, 2026, 5:37 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை: பிரதமர்
April 28, 2026, 5:35 pm
