செய்திகள் உலகம்
நான் ஒன்றும் பாலியல் குற்றவாளி அல்ல: செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான ட்ரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் என 2 ஆயிரம் பேர் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்ட பிறகு யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்குமோ என எவ்வளவு கவலைப்பட்டீர்கள் என செய்தியாளர் கேட்டதற்கு அதிபர் டிரம்ப், ‘‘நான் கவலைப்படவில்லை. வாழ்க்கையின் இயல்பை புரிந்து கொண்டிருக்கிறேன். துப்பாக்கி சூட்டிற்கு பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன் ’’ என்றார்.
இந்த தாக்குதலுக்கு முன்பாக கைதான சந்தேக நபர் அவரது குடும்பத்தினருக்கு எழுதிய சில விஷயங்களை செய்தியாளர் படித்து காட்டி அதைப் பற்றி கேட்டதற்கு டென்ஷனான அதிபர் டிரம்ப், ‘‘உங்களுக்கு தெரியுமா? அவன் ஒரு மோசமான மனநோயாளி.
நான் ஒன்றும் குழந்தை பாலியல் குற்றவாளி அல்ல. மனநோயாளி எழுதிய குப்பையை நீங்கள் படித்து காட்டுகிறீர்களா?’’ என்றார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட குழந்தை பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் பைல்சில் அதிபர் டிரம்ப் பெயர் பல இடங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
