செய்திகள் உலகம்
என் மனைவியை எதிர்பார்க்கப்படும் விதவை என விமர்சனம் செய்வதா?: நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்பை விமர்சனம் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விடுதியில் கடந்த சனியன்று அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாகிச்சூடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அந்நிகழ்வில் கலந்துகொண்ட டிரம்ப், அவர் மனைவி மெலனியா டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், அந்நிகழ்வு நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு டிரம்ப் மனைவியான மெலனியா டிரம்ப்பை ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் ‘விதவையாக எதிர்பார்க்கப்படுபவர்’ என்று விமர்சித்திருந்தது சர்ச்சையாகியுள்ளது.
ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் மெலனியா டிரம்ப், அவரது மகன் பாரோன் அங்கு அமர்ந்திருப்பதைப் போன்று விடியோ காட்சிகளைக் காண்பித்து அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நகைச்சுவை உணர்வு இல்லாத ஜிம்மி கிம்மல், தனது நிகழ்ச்சியில் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் முதல் பெண்மணியான மெலானியாவை ஒரு எதிர்பார்க்கப்படும் விதவையைப் போல அழகாக பொலிவுடன் இருக்கிறீர்கள் என கிம்மல் கூறியுள்ளார்.
கிம்மலின் இழிவான பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவிப்பதை நான் பாராட்டுகிறேன். அவர் சொல்வதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர் செய்திருப்பது எல்லை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
