செய்திகள் உலகம்
இந்தோனேசியாவை உலுக்கிய 'லிட்டில் அரேஷா' விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்பட 13 பேர் கைது
யோக்யகர்த்தா:
இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா பகுதியில் செயல்பட்டு வந்த 'லிட்டில் அரேஷா' (Little Aresha) எனும் சிறுவர் காப்பகத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாக நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் தலைவர், தலைமை ஆசிரியர் உட்பட 13 பேரை அந்நாட்டுப் போலிசார் கைது செய்துள்ளனர்.
அங்கு பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலை வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பான ரகசியக் கேமரா (CCTV) காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான அந்த அதிர்ச்சியூட்டும் காணொலியில், இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளின் கைகள், கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருப்பது உறுதியானது.
மேலும், போலிசார் மேற்கொண்ட சோதனையின்போது, வெறும் 3 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் கொண்ட ஒரு மிகச்சிறிய குறுகிய அறையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்தக் காப்பகத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்வேறு இன்னல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று நகர காவல்துறைத் தலைவர் ஈவா குணா பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அவர், இது குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இச் சம்பவம் இந்தோனேசியாவில் சிறுவர் காப்பகங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
