செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் ரயில் விபத்து: 7 பேர் மரணம்
ஜகார்தா
இந்தோனேசியாவின் ஜகார்தா அருகே ரயில்கள் மோதியதில் 7 பேர் மாண்டனர். 81 பேர் காயமடைந்தனர்.
பெரிய அளவில் மீட்புப் பணி தொடர்கிறது. ஜகார்தாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெகாசி திமுர் (Bekasi Timur) நிலையத்தில் விபத்து நடந்தது.
நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேறொரு நெடுந்தொலைவு ரயில் மோதியது.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிக்குள் இருந்த பலரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி மீது நெடுந்தொலைவு ரயில் மோதியதாக ஜக்கர்த்தா காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
அது பெண்களுக்கு மட்டுமான பெட்டி என்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரும் அந்தப் பெட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
நெடுந்தொலைவு ரயிலில் இருந்த சுமார் 240 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
