செய்திகள் மலேசியா
எம்ஏசிசியின் புதிய ஆணையர் ஊழலை எதிர்த்து போராடுவதில் வெளிப்படைத்தன்மை, துணிச்சலுடன் செயல்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
எம்ஏசிசியின் புதிய ஆணையர் ஊழலை எதிர்த்து போராடுவதில் வெளிப்படைத்தன்மை, துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
வரும் மே 13 முதல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக தலைமையேற்கவுள்ள டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமானுக்கு வாழ்த்துகளும்.
அவரின் இந்த நியமனம் நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், உண்மையைக் காக்கும் துணிச்சல் ஆகிய கொள்கைகளுடன் தொடர்ந்து வலுப்படுத்தப்படுத்த வேண்டும்.
அவரது பரந்த அனுபவமும் நீதித்துறைப் பின்னணியும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை மேலும் அதிகாரப்பூர்வமான, மதிக்கப்படும் ஒன்றாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.
நீதியையும் தூய்மையான ஆட்சியையும் அதிகளவில் கோரும் ஒரு நாட்டில், நேர்மை என்ற அம்சம் ஒவ்வொரு செயலிலும் முடிவிலும் முக்கிய சாராம்சமாக இருக்க வேண்டும்.
நேர்மை என்பது வெறும் முழக்கம் அல்ல. அது சட்டத்தின் அடிப்படையிலும் உலகளாவிய நீதிக் கொள்கைகளின் அடிப்படையிலும், பாரபட்சமின்றி உறுதியான செயல் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த மாபெரும் நம்பிக்கையைத் தாங்குவதற்கான வலிமையும் ஆற்றலும் டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமானுக்கு வழங்கப்படட்டும்.
ஊழலை ஒழிக்கும் முயற்சிக்கு அவரது தலைமை புத்துயிர் அளிக்கும். தேசிய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 1:11 pm
சிலாங்கூரில் உள்ள 688 ஆலய விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவை; மக்களை குழப்பக்கூடாது: குணராஜ்
April 27, 2026, 1:10 pm
16ஆவது பொதுத் தேர்தலில் மூவார் தொகுதியைக் கைப்பற்ற பாஸ் கட்சி விரும்புகிறது
April 27, 2026, 1:09 pm
வீட்டுக் காவல் மேல்முறையீட்டை நஜிப் திரும்பப் பெற்றார்
April 27, 2026, 11:56 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது
April 27, 2026, 11:34 am
எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு
April 27, 2026, 11:16 am
15,000 பேர் திரண்ட மீன்பிடித் திருவிழா: 10 லட்சம் ரிங்கிட் பரிசை அள்ளிய திரெங்கானு நபர்
April 27, 2026, 11:02 am
