நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுல்தானுக்கு அவமரியாதை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

ஷா ஆலம்: 

சமூக ஊடகங்கள் மூலம் சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் பதிவுகளுக்கு எதிராக, மலேசிய காவல் துறையும், மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல சிலாங்கூர் மாநில எஸ்க்கோ  உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

அந்தச் செயல் மிகைப்படுத்தப்பட்டது, அநாகரிகமானது, அரசியலமைப்பு மற்றும்,ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர்கள் விவரித்தனர்.

மாநில வீட்டுவசதி, கலாச்சாரக் குழுத் தலைவர் டத்தோ போர்ஹான் அமான் ஷா, அந்தச் செயல், நாட்டின் நிலைத்தன்மை, நல்லிணக்கத்திற்கான பாதுகாப்பு விதானமாக இருக்கும் மலாய் அரசர்கள் நிறுவனத்திற்கு எதிரான ஒரு தீவிர அவமதிப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

"எந்தவொரு சம்பந்தப்பட்ட தரப்பினரும், அவர்களின் பின்னணி அல்லது வழங்கப்பட்ட காரணங்களைப் பொருட்படுத்தாமல், பாதுகாக்கப்படக்கூடாது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இஸ்லாமிய மத விவகாரங்கள், புதுமை கலாச்சாரக் குழுத் தலைவர் டாக்டர் முஹம்மத் ஃபாஹ்மி நிகாவும், அவமதிக்கும் படத் திருத்தங்களைப் பதிவேற்றி, அவற்றை சிலாங்கூர் சுல்தானுடன் இணைப்பது, மக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் என்று கூறினார்.

"பிடிஆர்எம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்சிஎம்சி இந்த அவமதிப்பு உள்ளடக்கத்தைக் கண்காணித்து, தடுத்து, நீக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset