செய்திகள் மலேசியா
16ஆவது பொதுத் தேர்தலில் மூவார் தொகுதியைக் கைப்பற்ற பாஸ் கட்சி விரும்புகிறது
மூவார்:
16ஆவது பொதுத் தேர்தலில் முவார் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவதை ஜொகூர் பாஸ் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜொகூர் மாநில பாஸ் தலைவர் மஹ்ஃபோட்ஸ் முகமது தெரிவித்தார்.
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மகாராணி மாநிலத் தொகுதியையும் பாஸ் கட்சி தக்கவைத்துக் கொள்ளும்.
எதிர்பார்க்கப்படும் கடுமையான அரசியல் போட்டிக்குத் தயாராகும் வகையில், கட்சியின் செயல்பாடுகள் தற்போது முன்கூட்டியே வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாரிட் தாரோம், முவார் பாஸ் சமூக மையத்தில் நடைபெற்ற ஜொகூர் தேசியக் கூட்டணி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குனர் சனுசி முகமது நோர் தொடங்கி வைத்தார்.
மேலும், அவர் பாஸ் ஜொகூரின் தேர்தல் இயந்திரங்களின் தொடக்க விழாவையும் நிறைவு செய்தார்.
சைட் சாடிக் 15ஆவது பொதுத் தேர்தலில் முவார் நாடாளுமன்றத் தொகுதியில் 19,961 வாக்குகளைப் பெற்றார்.
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வேட்பாளர்களை 1,345 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொகுதியை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 1:11 pm
சிலாங்கூரில் உள்ள 688 ஆலய விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவை; மக்களை குழப்பக்கூடாது: குணராஜ்
April 27, 2026, 1:09 pm
வீட்டுக் காவல் மேல்முறையீட்டை நஜிப் திரும்பப் பெற்றார்
April 27, 2026, 11:56 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது
April 27, 2026, 11:34 am
எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு
April 27, 2026, 11:16 am
15,000 பேர் திரண்ட மீன்பிடித் திருவிழா: 10 லட்சம் ரிங்கிட் பரிசை அள்ளிய திரெங்கானு நபர்
April 27, 2026, 11:02 am
